
பாலகிருஷ்ண அறக்கட்டளை மற்றும் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் காலம் சென்ற தெய்வத்திரு.கலாவதி அம்மையார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நமது தலைமை அலுவலகத்தில் சமத்துவ விருந்து சிறப்பாக நடைபெற்றது.நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உணவை பரிமாறினார். இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

பீலிகான் முனீஸ்வரர் மற்றும் அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் *மெகா நீர் மோர் பந்தல்* மற்றும் *குளிர்பானங்கள்* வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சங்கத்தின் *நிறுவனத் தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன்* அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பொதுச் செயலாளர் S.சுரேந்திரன் மாவட்டத் தலைவர்கள் M.ரவிக்குமார் திரு. குமார் தினேஷ் பார்த்தசாரதி செயற்குழு உறுப்பினர்கள் S.ஸ்ரீனிவாசன் செந்தில அருள் K.லோகநாதன் சஞ்சய் சேகர் ஹரி பாபு வடசென்னை மாவட்டத்தின் சார்பில் நிர்வாகிகள் பிரவீன் கார்த்தி விமல் நிவேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இவ்விழாவில் 10000 மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.

நமது சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் மும்பை பங்கு வர்த்தகத்தில் INNOKAIZ INDIA LIMITED பங்கு வெளியீட்டு விழாவில் பங்குபெற்று INNOKAIZ INDIA LIMITED பங்குகளின் விற்பனையை தொடங்கி வைத்தார். இது நமது ஜே பி குழுமத்தின் பெருமைமிக்க ஒரு தருணமாக கருதும் இந்நேரத்தில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.